Menu


தமிழ் வளர்ச்சிக் கழகம் (Tamil Academy) 1947 செப்டம்பர் 26ஆம் நாள் Registration of Societies ACT XXI of 1980-இன் கீழ்ப் பதிவு செய்யப்பட்டது. அது பதிவு செய்யப்பட்ட நாள் முதல் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் சீரிய முறையில் தமிழ்ப் பணியாற்றிவருகிறது.. அன்றைய கல்வி அமைச்சர் திரு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களால் அவரது தலைமையில் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் திரு சி. சுப்பிரமணியம், திரு. ராஜா சர் முத்தையா செட்டியார், டாக்டர் A.L. முதலியார், திரு. ப. சிதம்பரம் திரு. ம. பெரியசாமித்தூரன் போன்ற தமிழ் அறிஞர்கள் பங்கேற்று வளர்த்துவந்த பெருமைக்குரியது. இந்நிறுவனம் இந்திய மொழிகளிலேயே முதன்முதலாகத் தமிழ் மொழியில் பத்துத் தொகுதிகள் பொதுக் கலைக்களஞ்சியம் அதன் பின்னர்ப்பத்துத் தொகுதிகள் குழந்தைகள் கலைக்களஞ்சியம் வெளியிட்ட பெருமைக்குரியது.