தமிழ் வளர்ச்சிக் கழகம்

தமிழ் வளர்ச்சிக் கழகம்
Tamil Academy · Since 1946

தமிழ் வளர்ச்சிக் கழகம்

தமிழ் வளர்ச்சிக் கழகம் (Tamil Academy) 1946-இல் தொடங்கப்பெற்று, 1947 செப்டம்பர் 26-ஆம் நாள் பதிவு செய்யப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் சீரிய முறையில் தமிழ்ப் பணியாற்றி வரும் இக்கழகம், அன்றைய கல்வி அமைச்சர் திரு தி.சு. அவிநாசிலிங்கம் செட்டியார் தலைமையில் தொடங்கப்பெற்ற தமிழின் முதன்மை அறிவு நிறுவனங்களுள் ஒன்றாகும்.

தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் ஆறு முன்னோடிகள்

திரு. சி. சுப்பிரமணியம், திரு. ராஜா சர் முத்தையா செட்டியார், டாக்டர் ஏ.எல். முதலியார், திரு. ப. சிதம்பரம், திரு. ம. ப பெரியசாமித்தூரன் போன்ற சான்றோர்களும் அறிஞர்களும் பங்கேற்று கழகத்தை வளர்த்து வந்துள்ளனர். கழகத்தின் வளர்ச்சியில் மேனாள் துணைவேந்தர்களான முனைவர் வா.செ. குழந்தைசாமி, முனைவர் மு. பொன்னவைக்கோ ஆகியோர் பெரும் பங்காற்றியுள்ளனர். தற்போது தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் அறங்காவலர் குழுவின் தலைவராக மேனாள் ஒன்றிய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்களும், தலைவராகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்திய மொழிகளிலேயே முதன்முதலாகத் தமிழில் பத்துத் தொகுதிகளாகப் பொதுக் கலைக்களஞ்சியமும், குழந்தைப் பருவத்தினருக்கென பத்துத் தொகுதிகளாகக் குழந்தைகள் கலைக்களஞ்சியமும் வெளியிட்டுப் பெருமை பெற்றுள்ளது.

தமிழ் ஆய்வு மற்றும்
வெளியீடுகள்
அகராதி மற்றும்
கலைக்களஞ்சியங்கள்
மாணவர் ஊக்குவிப்பு
மற்றும் உதவிகள்
தமிழ் வளர்ச்சி மற்றும்
பண்பாட்டுப் பணிகள்

கழகக் களஞ்சியம்

செய்தி மின்மடல்

தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் செய்திமின் மடல்களைப் படித்து, அண்மைய அறிவிப்புகள், வெளியீடுகள் மற்றும் நிகழ்வுகளை அறிந்துகொள்ளுங்கள்.

வெளியீடுகள்

அறிவியல் நூல்கள்,
மருத்துவக் களஞ்சியம்,
சித்த மருத்துவம்,
அறிவியல் தொழில்நுட்பம் 
என வகைப்படுத்தப்பட்டுள்ளது

சொல் புதிது

தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் "சொல் புதிது" தரவுத்தளத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ்ச் சொற்களைத் தேடிப் பாருங்கள்.
📚 15 கூட்டங்கள் 📝 479 புதிய சொற்கள்

கலைக்களஞ்சியம்

செய்தி மின்மடல் சேர